Tuesday, June 30, 2015

ஜெயகாந்தன் புகழ் அஞ்சலி கூட்டத்தில் ஞானலயா கிருஷ்ணமூர்த்தி உரை 26.04.2015

கடந்த ஏப்ரல் 26 ம் தேதி புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடந்த ஜெயகாந்தன் புகழ் அஞ்சலி கூட்டத்தில்
திரு.S. ஆரோக்கியசாமி
மருத்துவர் திரு. ஜெயராமன்
முனைவர் நா.அருள்முருகன்
எழுத்தாளர் சந்திரகாந்தன்
ஞானாலயா ஆய்வு நூலகம் திரு.பா. கிருஷ்ணமூர்த்தி (சிறப்புரை)
M.T.கந்தசாமி ஆகிய அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டு உரை ஆற்றினர்

அந்த தொகுப்பின் ஒலி,ஒளி வடிவம் உங்களுக்காக இங்கே
மேலும் வருகிற ஆகஸ்ட் 16 அன்று ஞானலயா பவளவிழா கொண்டாட இருக்கிறது.. இது பற்றிய விபரம் இந்த இணைப்பில்


நன்றி
நிகழ்காலத்தில் சிவா


 ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, 
ஞானாலயா ஆய்வு நூலகம்,
 6, பழனியப்பா நகர்,
திருக்கோகர்ணம்,
 புதுக்கோட்டை 622 002
தமிழ்நாடு.
 தொ.பே. எண்: 04322-221059
மொபைல்: (0) 9965633140

Tuesday, June 23, 2015

ஞானாலயா பவளவிழா மலர் 2015

இன்றைய கணினி யுகத்தில் ஞானாலயா ஆய்வு நூலகம் பற்றி ஓரளவிற்கே நண்பர்கள் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. அச்சுத்துறை வளர்ச்சி அடைய, அடைய தமிழில் புத்தகங்கள் வெளியாகத் துவங்கின.  கணினிகள் இல்லாத காலம் அது.. அப்போது வெளியிடப்பட்ட நூல்கள் பல இன்று காலத்தால் இல்லாமல் போயின.. அப்படி மீதம் இருப்பினும் முதல்பதிப்பு எனும் மூலவடிவில் இருந்து மாறுபட்டவை பல நூல்கள்.

இந்தத் தமிழ் சமூகம் காலத்தின் மாற்றத்தினால் எதை இழந்தாலும், அச்சில் வந்த நூல்களை வரும் தலைமுறைக்கு முழுமையாக அர்பணிக்கவேண்டும் என்ற உணர்வோடு சேமிக்கப்பட்டவைதாம் முதல்பதிப்பு நூல்கள்.

ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் புத்தக சேகரிப்பின் 60 ஆண்டு நிறைவு விழா  மற்றும் இவரது 75 வயதை ஒட்டியும் பெருமைப்படுத்தும் விதமாக பவளவிழா நடைபெற உள்ளது. இது குறித்த அமைக்கப்பட்ட குழுவினரின் விபரங்கள் இணைப்பில் உள்ளது.

விழாவிற்கான இடமும் தேதியும் பின்னர் தெரிவிக்கப்படும். இவ்விழாவில் எங்ஙனம் தங்கள் பங்களிப்பை அளிக்க விரும்பினாலும் அதற்கேற்ற வகையில் விபரங்களை அளிக்க வேண்டியே இந்த பதிவு.

இந்த விழாவிற்கான நன்கொடைகள் பெறுவதற்கென நிதிக்குழு செயலாளர் அவர்களின் பெயரில் இதற்கென புதிய வங்கிக்கணக்கு துவங்கப்பட்டு இருக்கிறது.

Dr. JAYARAMAN  N
Account no:3454327836
central bank of india
IFSC Code: CBIN0282105
Branch: PUDUKOTTAI

தங்களின் நன்கொடைகள் online transfer ஆக இருக்கும்பட்சத்தில் மேற்கண்ட வங்கிக்கணக்குக்கு அனுப்பிவிட்டு தகவல்களை இங்கே பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். உரிய இரசீதுகளை இந்த விழா மலர்க்குழு உறுப்பினர்களான திரு.ஜோதிஜி, மற்றும் திரு.நிகழ்காலத்தில் சிவா  ஆகியோர் உங்களுக்கு அனுப்பிவைப்பார்கள்.

ஞானாலயா சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், அனுபவங்களையும் அனுப்பி வைக்கலாம். அவைகளும் விழாமலரின் முதன்மைப் பதிப்பாசிரியர் திரு. வைகறை அவர்களால் பரிசீலிக்கப்பட்டு விழாமலரில் இடம்பெறும்.அரிய தமிழ் நூல்களை பாதுகாப்பதிலும், பாதுகாத்த தம்பதியினரை பெருமைப் படுத்துவதிலும் நம் பங்களிப்பை உறுதி செய்வோம்..

நன்றி
நிகழ்காலத்தில் சிவா


 ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, 
ஞானாலயா ஆய்வு நூலகம்,
 6, பழனியப்பா நகர்,
திருக்கோகர்ணம்,
 புதுக்கோட்டை 622 002
தமிழ்நாடு.
 தொ.பே. எண்: 04322-221059
மொபைல்: (0) 9965633140

Monday, June 22, 2015

தி இந்து சித்திரை மலர் - 2015 ல் ஞானாலயா பற்றி சிறப்புக்கட்டுரை

தமிழ் நூல்கள் அச்சிடப்பட்ட காலந்தொட்டு முதல்பதிப்பு நூல்களின் முக்கியத்துவம் பற்றி எடுத்துச் சொன்னால் மட்டுமே புரியும்..  ஏன் முதல்பதிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.? எளிதில் புரியும் வண்ணம் ஞானாலயா நூலகம் பற்றிய சிறப்புக்கட்டுரை உங்களுக்காக


தமிழ் இந்து சித்திரை மலர் 2015 புத்தகத்தில்

அய்யாவுடன் தொடர்பு கொள்ள..
 ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம்,
 6, பழனியப்பா நகர்,
திருக்கோகர்ணம்,
 புதுக்கோட்டை 622 002
தமிழ்நாடு.
 தொ.பே. எண்: 04322-221059
மொபைல்: (0) 9965633140


 நன்றியுடன் நிகழ்காலத்தில் சிவா