Tuesday, April 2, 2013

சி.சு.செல்லப்பா நூற்றாண்டுவிழா உரை - ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

சிறுபத்திரிக்கைகளுக்குப் பின்னால் உள்ள பெரும் சரித்திரம் பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி தஞ்சாவூர் பாரதி சங்கத்தில் தமிழறிஞர்களும் வாக்கும்  என்ற பொருளில்  சி.சு.செல்லப்பாவின் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஆற்றிய புத்தம்புதிய உரை....(இடம்:-சுப்பையா நாயுடு உயர்நிலைப்பள்ளி, தஞ்சை)

இனி உரையிலிருந்து....

எஸ்.ரா. நூலில் இருப்பதாக தினமணியில், திருக்குறளை திருத்துவதா? மஹாவித்வான் தியாகராஜ செட்டியார் வாழ்க்கையில் நடந்த சம்பவமாக போட்டிருந்த தகவல் தவறானது. நடந்தது வேறு.

தமிழ்த்தாத்தா உ.வே.ச விற்கு சங்க இலக்கியங்களைப் பதிப்பிப்பதற்கும், கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிவதற்கும் வாய்பினை ஏற்படுத்தித் தந்தவரே மஹாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் முதல் மாணவரான இந்த தியாகராஜ செட்டியார்தான். இவர் இல்லையெனில் உ.வே.ச இல்லை. இந்த நிகழ்வுக்கு தந்த அவர் தந்த தலைப்பு..’திருக்குறளைத் திருத்திய பாதிரியார்.

இவர் உறையூரில் இருந்தபோது நடந்த நிகழ்வுதான் திருக்குறள் பற்றியது உண்மை என்ன?.... கேளுங்கள் உரையில்:)

(..சமீப காலத்திய உண்மைகளே எப்படி மழுங்கடிக்கப்படுகின்றன என்பதையும் அறிந்து நாம் செய்ய வேண்டியது என்ன? என முடிவு செய்யுங்கள்.)

#########

லட்சக்கணக்கான பேர் படிக்கக்கூடிய தினமணி சிறுவர்மணியில் வந்த ஒரு செய்தி..மகாத்மா - டால்ஸ்டாய்ஸ் இடையே நடந்த நிகழ்வுபற்றி - பொய்யானது என்பதை சாதரணமாக சிந்திக்கின்றவர்களுக்கு கூட தவறு என்பது புலப்படும் என்பதை சொல்கிறார். ஆதாரங்களோடு, .. ஆதங்கத்தோடு.. பத்திரிக்கையை குறை சொல்வது இவரது நோக்கமில்லை. வரலாற்றை ஆவணப்படுத்துவது என்பது போய் வரலாற்றை திரிப்பது என்ற நிலை தற்போது  இருக்கிறது. இது நல்லதல்ல என்ற செய்தியை நமக்கு ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார்

########

சிற்றிலக்கிய வரலாற்றில் மணிக்கொடி 1933 ல் தோன்றிய வரலாறு,
நவயுக பிரசுரலாயம் மூலம் முதல்முதலாய் மலிவுவிலை பதிப்புகள்.
இவருடன் முப்பது வருடங்கள் பழகிய அனுபவம் உள்ள ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரையில் தொடர்ந்து.......

எழுத்து என்ற விமர்சன இதழ் 1959 சனவரி தோற்றுவிக்கப்பட்டு 12 வருடம் வெளிவந்தது. சிறு பத்திரிக்கை உலகில் சாதனை புரிந்த இதழ் இது.
தினமணிச்சுடரை தினமணிக்கதிர் ஆக பெயர்மாற்றம் பெற்றது செல்லப்பாவினால்தான்..

ஹிந்துவை தோற்றுவித்தவர் ஜி.சுப்ரமணிய அய்யர்   ...........காரணம்,
முத்துசாமி அய்யர்தான் முதன் ஹைகோர்ட் முதல் இந்திய நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். 1878 ல்...ஆங்கில ஆட்சியில் ஒரு (இந்திய) கருப்பனை நீதிபதியாக வைத்து வெள்ளைக்கார வழக்கறிஞர்கள் எப்படி மைலார்ட் என அழைக்கமுடியும்? என்று அனைத்து பத்திரிக்கைகளும் கண்டித்து எழுத ....ஜி.சுப்ரமணிய அய்யர் உள்ளிட்ட 6 நண்பர்கள் மறுப்பு கடிதம் எழுத எந்த பத்திரிக்கையும் வெளியிடவில்லை.

எனவே நம் கருத்தை வெளியிட ஒரு பத்திரிக்கை வேண்டும் என்று எண்ணி இந்த கருத்தை வெளியிட 1878ம் ஆண்டு.1.75 ரூபாயில் 80 பிரதிகள் ஹிந்து என்ற பெயரில் வெளியிட்டனர்.   இதன் பின்னர் சுதேசமித்திரன் 1883ல் தோன்றியது சுதந்திர உணர்வைத் தூண்ட..... ஹிந்து என்ற ஆங்கிலபெயருடன் சுதந்திரப்போராட்டத்துக்கு பத்திரிக்கை கூடாது

########

சி.சுப்ரமணிய அய்யர் பெரியாருக்கு முன்னதாகவே 12 வயதான பால்ய விதவைக்கு மறுமணம் செய்வித்தவர் அப்போது பெரியாருக்கு வயது 10.   விதவை மறுமணம் செய்வித்த காரணத்தினால்
சாதிவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டார். பெண்ணுரிமைக்கு பாடுபட்டவர்.

#########


1976 ல் சி.சு.செல்லப்பாவின் வீடு ஏலத்துக்கு வருகின்ற அன்று இந்த உரையாளார் கிருஷ்ணமூர்த்தி புத்தகம் விற்ற பணத்தை கொடுத்து அதை மீட்கிறார். அதுமட்டுமல்ல.. இதில் பெருமைபட ஒன்றும் இல்லை. இது என் பாக்கியம் என்கிறார். அப்படியெனில் இவரது ஞானாலயாவிற்கு உதவுவதும் நமக்குப் பாக்கியம்தான்...

ஞானாலயாவிற்கு எந்தவிதத்திலாவது உதவ வேண்டியது நமது கடமை என்ற எண்ணத்தில்.. 
நிகழ்காலத்தில் சிவா


 மேலும் விபரங்களுக்கு..


ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா, 
 
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 
 
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140


 

2 comments:

 1. What's up all, here every one is sharing these knowledge, therefore it's
  nice to read this webpage, and I used to pay a quick visit
  this webpage everyday.

  Also visit my homepage; youtube

  ReplyDelete
 2. I really like your blog.. very nice colors & theme. Did you
  design this website yourself or did you hire someone to do it for you?

  Plz answer back as I'm looking to create my own blog and would like to know where u got this from. thanks

  Have a look at my site; http://www.squidoo.com/how-to-use-hair-oil

  ReplyDelete

புதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தொடர்ந்து புதிய இடுகைகளைப் பெற உங்கள் மெயில் முகவரியை arivedeivam@gmail.com க்கு அனுப்பி வையுங்கள்.