Sunday, March 3, 2013

அணையா விளக்கு - பாரதி பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி உரை

செப்டம்பர் 15 ஞாயிறு  அன்று அணையா விளக்கு பாரதி என்ற பொருளில் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆற்றிய உரையின் சில சுவாரசியமான பகுதிகள் இங்கே..

உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள் 12 நாளில் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கிறார். இதற்கு முன்னதாக வேறு மொழிபெயர்ப்பு வந்திருந்தாலும் இதன் சிறப்பு என்னவென்றால் 80 பக்க முன்னுரைதான். அதில் ஆதிகவியான ஹேமரில் இருந்து சமகால கவியான தாமஸ் வரை சொன்னவற்றின் அடிப்படையில் ஒப்பிட்டு, திருக்குறள் காலம் கடந்த ஒன்றாக, வென்றதாக இருக்கிறது என்று தெளிவு படுத்தி இருக்கிறார். இந்த சமயத்தில் ஆங்கிலேயர்களுக்கு அடக்குமுறைக்கு ஆட்பட்டுவிடாமல் தப்பிக்க பாண்டிச்சேரியில் இவரை அடைக்கலம் ஆக உதவியவர் பாரதி.
                                                     *   *  *  *
16 மொழி கற்றுத் தேர்ந்தவர் பாரதி, தமிழில்தான் எழுதவேண்டும், பேச வேண்டும் என்ற இருந்ததோடு பல செயல்திட்டங்களையும் வகுத்து செயல்படுத்தினார். அப்படி அறிவியல் சொற்களை தமிழ்படுத்துவது முடியாது என ஒருவர் சொல்ல, மெல்லத் தமிழ் இனி சாகும் என அந்த பேதை சொன்ன சூழல் என்ன ?  எட்டுத்திக்கும் செல்வீர் என்ற கவிதை பிறந்த வரலாறு அறிய உரையைக் கேளுங்கள் :)

                                                *      *      *

அன்னிபெசண்ட் அம்மையார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை தத்து எடுத்துக்கொண்டது வழக்காக மாறுகிறது. இதைப்பற்றி பாரதி ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதுகிறார். அதற்கு 500 பிரதிகள் மொத்தமாக ஆர்டர் வருகிறது, அந்த ஆர்டரை பூர்த்தி செய்தால் பாரதி வீட்டில்  இரண்டுமாதம் அடுப்பெரியும். ஆனால் பாரதியோ முழுமையாக என்னை ஈடுபடுத்தி எழுதிய பாஞ்சாலி சபதத்தை வாங்க நாதியில்லை. பொழுதுபோக்காக எழுதியதை 500 பிரதிகள் கேட்டால் என்ன அர்த்தம். இல்லை என்று சொல்லிவிடு என்றார்.

காசுக்காக எதையுமே எழுதியதில்லை. எழுதியது எதையுமே காசாக்கவும் விரும்பியதில்லை பாரதி.  தொடர்ந்து படிக்க ஆர்வமா?

இதோ ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சேமிப்பில் இருந்த இந்த ஒலிப்பதிவை கேளுங்கள்...ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நினைவாற்றல் சிறப்பினை அறியுங்கள். முடிந்தால் ஒருமுறை நேரில் செல்லுங்கள், நூலகத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கூடவே நூலகத்திற்கு எந்தவகையில் உதவமுடியும் என்றும் பாருங்கள்.இந்த விபரங்கள் எல்லோருக்கும் சென்று சேர ஓட்டுப்பட்டைகளில் வாக்களியுங்கள். பேஸ்புக், கூகுள் பிளஸ், டிவீட்டர் போன்ற் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போதுதான் வரும்காலத்தில் ஞானாலயா என்று தேடினால் இந்த பொக்கிஷங்கள் தேடுவோருக்கு கிடைக்கும். இதுவும் கூட நம் தமிழுக்கு நாம் செய்யும் தொண்டுதான்..
ஞானாலயாவிற்கு எந்தவிதத்திலாவது உதவ வேண்டியது நமது கடமை என்ற் எண்ணத்தில்.. 
நிகழ்காலத்தில் சிவா


 மேலும் விபரங்களுக்கு..

ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா, 
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140


1 comment:

  1. அன்பின் சிவா - அருமையான பணீ - பதிவினிற்கு நன்றி - இரண்டு மணீ நேரத்திற்கும் மேலாக ஒட்டும் காணொளியினைப் பொறுமையாகப் பார்க்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

புதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தொடர்ந்து புதிய இடுகைகளைப் பெற உங்கள் மெயில் முகவரியை arivedeivam@gmail.com க்கு அனுப்பி வையுங்கள்.