Wednesday, March 20, 2013

இதோ வரலாறு பேசுகிறது... தேவகோட்டையில் ஞானாலயா

மு.வ அவர்கள்தான் தமிழ் புலவர்கள் வரலாற்றில் மணிவிழா கொண்டாடாத மாமனிதர். சென்னை பல்கலைகழகத்தில்  ஆங்கில நூல் எழுதி முதல்முதலாக டாக்டர் பட்டம் பெற்றவரும் மு.வ தான்..

அதுமட்டுமல்ல.. அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைகழகத்தால் முதன்முதலாய் அழைக்கப் பெற்று டாக்டர் பட்டம் வழங்கப்பட்டவர் மு.வ அந்த விசயத்தை பத்திரிக்கைக்குக் கூட தெரிவிக்கவில்லை.

அவரை விமானநிலையத்தில் வழியனுப்பக்கூட யாரும் வருவதை அனுமதிக்கவில்லை. மவுண்ட்ரோடு விமானநிலைய அலுவலகத்துக்குக்கூட யாரையும் அனுமதிக்கவில்லை.

1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது நடுவண் அரசு பத்மஸ்ரீ பட்டம் கொடுத்தது. இந்தப்போராட்டம் தமிழுக்கென நடந்துகொண்டிருக்கும்போது எனக்கு பத்மஸ்ரீ பட்டம் வேண்டாம் என்று சொன்னவர் மு.வ.

முதன் நான்குநிமிட உரை இது

##########

திரு.மில்லரின் மாணவர் பரிதிமாற்கலைஞர். வீ.கோ.சூரியநாராயண சாஸ்திரி. தனக்கு பாடம் எடுத்த மில்லரிடம் ஆங்கிலகவிஞர் டென்னிசின் ஒரு கவிதையை குறிப்பிட்டு பாராட்ட.. இதைவிட சிறந்த கவிதை இதற்கு 9 நூற்றாண்டுக்கு முன்னரே வந்த  கம்பராமாயணத்திலிருந்து இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லி மில்லர் தமிழ் குறித்து பெருமைப்படச் செய்தவர் இவரே பரிதிமாற்கலைஞர் எனப் பெயரை மாற்றிகொண்டவர்.

1960 வரை தமிழுக்கு பாடுபட்டவர்களில் பலர் தமிழில் பாண்டித்யம் பெற்றவர்கள் அனைவருமே வழக்கறிஞர்களாக இருந்து வந்தவர்கள்தாம்.
வ.உ.சி முதல் இரா.பி.சேதுப்பிள்ளை வரை..வையாபுரிப்பிள்ளை, சோமசுந்தர பாரதி வரை விரும்பி தமிழ்த் தொண்டு செய்தனர்.

@@@@@@@@@@

மறைமலை அடிகள் என்ற வேதாச்சலம், 17 வயதில்1892 திருவனந்தபுரம் பல்கலைகழகத்தில் பேசச் செய்தனர். 1896 இந்த மறைமலை அடிகளை அழைத்துவந்து கிருத்துவகல்லூரியில் தமிழ்துறையில் பணியாற்றப் பணித்தவர் பரிதிமாற் கலைஞர்.

தமிழ்ச் செம்மொழி முழங்கியவர் பரிதிமாற்கலைஞர். செந்தமிழ் என்ற மாத இதழ், அச்சகம், துவங்கியவர்.

&&&&&&&&&&

 தொடர்ந்து ....திருக்குறளில் பரிமேழலகர் உரை நெருடிய இடஙளைச் சுட்டிக்காட்டி இரா.பி.சேதுப்பிள்ளை மூன்று மணிநேரம் பேசினார்.   இவர்கள் சொல்லியதை எல்லாம் தன்கருத்தாக ஒருவர் (?) எழுதிஉள்ள அவலமும் உண்டு என்பதை ஞானாலயா சொல்லும்போது  இரத்தம் துடிக்கிறது.

****************

 தமிழை வாழவைத்தவர்களின் வரலாற்றுகளை பதிவு செய்வதில் தமிழ் சமூகம் செய்து வரும் தவறை திரு. ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சுட்டிக்காட்டும் விதம் நம் அடிமனதைத் தொடும்.

அரசியல் சார்ந்து அல்லாது அனைவரும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் அனுபவங்களை, தமிழ் அச்சுத் துறை சார்ந்த முழுவரலாறுகளை அச்சிலேற்றாமலே தவறவிட்டுவிடுவோம் போன்றதொரு நிலைமை இருப்பதை உணர்வோம்

இவற்றை ஆவணப்படுத்தும் விதமாக இந்த வலைதளம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தை வரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்ல நமது பங்களிப்பு என்ன என்ற சிந்தனை இந்த .உரையைக் கேட்டால் உங்களுக்குள் பெருக்கெடுத்து வரும் என்ற உறுதியை அளிக்கிறேன்.

தேவகோட்டை தமிழ் இலக்கிய பேரவை சார்பாக 9.03.2013 பேசிய உரை..

இதோ உங்களுக்காக...


ஞானாலயாவிற்கு எந்தவிதத்திலாவது உதவ வேண்டியது நமது கடமை என்ற எண்ணத்தில்.. 
நிகழ்காலத்தில் சிவா

  உங்களின் கருத்துகளை தெரிவிக்கவும் என்ன உதவிகள் தேவைப்படும் என அறிந்து நேரடியாக உங்கள் பங்களிப்பைச் செய்யவும்..

ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலம்

6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 

புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140
Saturday, March 16, 2013

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஞானாலயா

நாளை ஞாயிறு 17/03/2013 காலை 10.30 முதல் 11.00 வரை புதிய தலைமுறை டிவியில்

 “களம் இறங்கியவர்கள்” என்ற தலைப்பில்

புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை ஒளிபரப்பாகிறது.

வாய்ப்பு இருக்கிறவர்கள் பார்த்து பயனடையுங்கள். அனைவருக்கும் தகவலைக் கொண்டு சேருங்கள்

  மேலும் விபரங்களுக்கு..


ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா, 
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140

Tuesday, March 12, 2013

புதுக்கோட்டை வரலாறு - ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி உரை 03/03/2013

புதுக்கோட்டை பர்மாவில் இருந்து வந்து 1934 ல் ஒரு இலட்சம் முதலீடு செய்து தமிழ் பத்திரிக்கை உலகில் மறுமலர்ச்சியை தோற்றுவித்த வை.கோவிந்தன் அவர்கள் உருவாக்கப்பட்டவர்கள்தான்

 பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம்.
பாரி நூல்நிலையம்
வானதி திருநாவுக்கரசு
தமிழ்வாண்ன்
போன்றவர்கள்.  இவர்கள் எல்லோரும் வை.கோவிந்தன் அவர்களிடம் பணிபுரிந்தவர்கள்

அதுமட்டுமல்ல.. குழந்தைகளுக்கென தனி இதழ், மங்கையர்க்கென தனி இதழ்.,
தோற்றுவித்ததும் இவர்தான்


புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மட்டும் யுத்தகாலத்தில் அச்சகங்களுக்கான பேப்பர் கட்டுபாடு இல்லை.  ..

தொடர்ந்து புதுக்கோட்டை நகர வரலாற்று ஆதியோடு அந்தமாக தெரிந்துகொள்ள உரையைக் கேளுங்கள்புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் கடந்த 3.3.2013 அன்று நடந்த விழாவில் புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இந்த உரை சுமார் ஒரு மணிநேரம் பத்துநிமிடம் ஓடக்கூடியது. பொறுமையாக கேட்டு அரிய விசயங்களை கேளுங்கள்.ஞானாலயாவிற்கு எந்தவிதத்திலாவது உதவ வேண்டியது நமது கடமை என்ற் எண்ணத்தில்..
நிகழ்காலத்தில் சிவாSunday, March 3, 2013

அணையா விளக்கு - பாரதி பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி உரை

செப்டம்பர் 15 ஞாயிறு  அன்று அணையா விளக்கு பாரதி என்ற பொருளில் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆற்றிய உரையின் சில சுவாரசியமான பகுதிகள் இங்கே..

உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள் 12 நாளில் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கிறார். இதற்கு முன்னதாக வேறு மொழிபெயர்ப்பு வந்திருந்தாலும் இதன் சிறப்பு என்னவென்றால் 80 பக்க முன்னுரைதான். அதில் ஆதிகவியான ஹேமரில் இருந்து சமகால கவியான தாமஸ் வரை சொன்னவற்றின் அடிப்படையில் ஒப்பிட்டு, திருக்குறள் காலம் கடந்த ஒன்றாக, வென்றதாக இருக்கிறது என்று தெளிவு படுத்தி இருக்கிறார். இந்த சமயத்தில் ஆங்கிலேயர்களுக்கு அடக்குமுறைக்கு ஆட்பட்டுவிடாமல் தப்பிக்க பாண்டிச்சேரியில் இவரை அடைக்கலம் ஆக உதவியவர் பாரதி.
                                                     *   *  *  *
16 மொழி கற்றுத் தேர்ந்தவர் பாரதி, தமிழில்தான் எழுதவேண்டும், பேச வேண்டும் என்ற இருந்ததோடு பல செயல்திட்டங்களையும் வகுத்து செயல்படுத்தினார். அப்படி அறிவியல் சொற்களை தமிழ்படுத்துவது முடியாது என ஒருவர் சொல்ல, மெல்லத் தமிழ் இனி சாகும் என அந்த பேதை சொன்ன சூழல் என்ன ?  எட்டுத்திக்கும் செல்வீர் என்ற கவிதை பிறந்த வரலாறு அறிய உரையைக் கேளுங்கள் :)

                                                *      *      *

அன்னிபெசண்ட் அம்மையார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை தத்து எடுத்துக்கொண்டது வழக்காக மாறுகிறது. இதைப்பற்றி பாரதி ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதுகிறார். அதற்கு 500 பிரதிகள் மொத்தமாக ஆர்டர் வருகிறது, அந்த ஆர்டரை பூர்த்தி செய்தால் பாரதி வீட்டில்  இரண்டுமாதம் அடுப்பெரியும். ஆனால் பாரதியோ முழுமையாக என்னை ஈடுபடுத்தி எழுதிய பாஞ்சாலி சபதத்தை வாங்க நாதியில்லை. பொழுதுபோக்காக எழுதியதை 500 பிரதிகள் கேட்டால் என்ன அர்த்தம். இல்லை என்று சொல்லிவிடு என்றார்.

காசுக்காக எதையுமே எழுதியதில்லை. எழுதியது எதையுமே காசாக்கவும் விரும்பியதில்லை பாரதி.  தொடர்ந்து படிக்க ஆர்வமா?

இதோ ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சேமிப்பில் இருந்த இந்த ஒலிப்பதிவை கேளுங்கள்...ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நினைவாற்றல் சிறப்பினை அறியுங்கள். முடிந்தால் ஒருமுறை நேரில் செல்லுங்கள், நூலகத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கூடவே நூலகத்திற்கு எந்தவகையில் உதவமுடியும் என்றும் பாருங்கள்.இந்த விபரங்கள் எல்லோருக்கும் சென்று சேர ஓட்டுப்பட்டைகளில் வாக்களியுங்கள். பேஸ்புக், கூகுள் பிளஸ், டிவீட்டர் போன்ற் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போதுதான் வரும்காலத்தில் ஞானாலயா என்று தேடினால் இந்த பொக்கிஷங்கள் தேடுவோருக்கு கிடைக்கும். இதுவும் கூட நம் தமிழுக்கு நாம் செய்யும் தொண்டுதான்..
ஞானாலயாவிற்கு எந்தவிதத்திலாவது உதவ வேண்டியது நமது கடமை என்ற் எண்ணத்தில்.. 
நிகழ்காலத்தில் சிவா


 மேலும் விபரங்களுக்கு..

ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா, 
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140