Thursday, August 2, 2012

கொடி அசைந்ததால் காற்று வந்ததா? காற்று வந்ததால் கொடி அசைந்ததா?


சிரிக்கும் துறவிகள் என்ற தலைப்பில், ஞானாலயா திரு பா.கிருஷ்ண மூர்த்தி அவர்கள் காக்கைச்சிறகினிலே டிசம்பர் 2011 இதழில் ஜென் புத்தரியத்தைப் பற்றி எழுதியிருந்த கட்டுரையில் இருந்த ஒரு கதையை, முந்தைய பதிவொன்றில் பார்த்திருந்தோம், இல்லையா!ஜென் என்பது என்ன? மதமாய் நிறுவப்படாத ஒரு அற்புத இயல்புத் தன்மை! சாதாரண மனதின் விழிப்புணர்ச்சிச் சிகரம்!முழுமையான விடுதலையை நோக்கிய எதார்த்தம்! தீவீரமான இயற்கைத்தன்மை கொண்ட வாழ்க்கையின் களிப்பு!

ப்படி ஒரு சுருக்கமான விளக்கத்தோடு ஜென் பற்றிய அறிமுகம் தொடங்குகிறது. அடுத்து, இத்தகைய குணாதிசயங்கள் மனிதனின் வாழ்க்கையில் சாத்தியம் தானா  என்று இயல்பாகவே எழும் மனித மனத்தின் சந்தேகப்படும் இயல்பைத் தொட்டு,விடை சொல்கிற மாதிரி ஜென் (பவுத்தத்தின்) தோற்றத்தின் பின்னணியைத் தொட்டு கட்டுரை விரிகிறது.

புத்தருக்கு முன்னாலேயே சீனாவில் லாவோட்சேயும், கன்பூசியசும், தத்துவார்த்தத் தேடலை தொடங்கி வைத்திருந்தாலும், ஜென் வாழ்க்கையின் எதார்த்தங்களை விட்டு விலகியோ, அல்லது எதார்த்தத்தில் இருந்து தப்பிச் செல்வதையோ ஏற்கவில்லை. ஜென் ஜப்பானிய தேசத்தில் பிறந்து, செழுமையடைந்ததைக் கட்டுரை, தெளிந்த நீரோட்டம் போல எடுத்துச் சொல்கிறது.அங்கங்கே ஜென்னை புரிய வைக்கும் முகமாக சிறு சிறு குட்டிக் கதைகள்!

ருமுறை இரு ஜென் துறவிகள் கொடிக்கம்பத்தில் ஒரு கோடி பறந்து கொண்டிருப்பதைக் கண்டனர்.தங்களுக்குள் விவாதம் செய்து  கொண்டிருந்தனர்.

"
காற்று தான் அசைகிறது" என்றார் ஒருவர்.

"
இல்லை, இல்லை!கொடிதான் அசைகிறது" என்றார் மற்றொருவர்.

இந்த விவாதத்தை கவனித்துக் கொண்டிருந்த ஜென் குரு இடை மறித்துச் சொன்னார்,"கொடியும் அசையவில்லை! காற்றும் அசையவில்லை!உங்கள் மனந்தான்அசைகிறது" என்று. இதைக் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்த அந்த இரு துறவிகளின் மனதில் பதியும்படி மேலும் தொடர்ந்தார் குரு. "வாயைத் திறந்ததும் அனைத்தும் தவறாகின்றன."

விவாதங்களும் அறிவுரைகளும் எப்போதும் முழுமையை எட்டுவதில்லை!காக்கைச் சிறகினிலே திரு வி முத்தையா அவர்களை வெளியிடுபவர், ஆசிரியராகவும், இதழாசிரியராக வைகறையையும் கொண்டு சென்னையில் இருந்து வெளி வருகிறது.

தனி இதழ்  ரூ.20  ஆண்டு சந்தா ரூ.225
தொடர்பு முகவரி:

காக்கை,
அறை எண் : 7, முதல் தளம், நோபிள் மேன்ஷன்,
288, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி

சென்னை 600 005


மின்னஞ்சல் : saalaramvaigarai@gmail.com

3 comments:

 1. நல்லதொரு ஜென் கதை...

  இன்றைய உலகில் பெரும்பான்மையோர் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் யாரும் கேட்பதில்லை...

  நமக்கு நாமே சொல்லிக் கொண்டு நாம் முதலில் மாறிட வேண்டியது தான்.

  பகிர்வுக்கு நன்றி...
  (த.ம.2)

  ReplyDelete
 2. கருத்துக்கு நன்றி திரு தனபாலன்!

  மாற்றம் என்பது வெளியே இருந்து வருவது அல்ல.தனக்குள் நிகழவேண்டியது.இதைப் புரிந்து கொண்டால், மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதற்காக, இந்தக் கதைகள் சொல்லப்படவில்லை, எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, தன்னுடைய இயல்பான நிலையில் இருப்பதே ஜென்.ஊருக்கு உபதேசம் செய்வதென்று நினைத்துக் கொண்டு பார்த்தால், ஜென் என்று மட்டுமில்லை, வேறு எதையுமே புரிந்து கொள்ள முடியாது.

  பதிவின் இறுதிவரியில் உள்ள சுட்டியில், முழுக்கட்டுரையும், பிடிஎப் வடிவில் கிடைக்கிறது. நேரம் கிடைக்கும்போது, படித்துப்பாருங்கள்.

  ReplyDelete
 3. சிகரம் பாரதி என்ற பதிவரிடம் இருந்து வந்த இரண்டு பின்னூட்டங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.முதலாவது, nice என்று ஒற்றைச்சொல்லில்! பதிவைப் படித்தாரா,புரிந்து கொண்டாரா என்பது அவருக்கே வெளிச்சம்! அடுத்தது, அவருடைய வலைப்பதிவுக்கான விளம்பரம்! இரண்டுவிதமான பின்னூட்டங்களையும் நிராகரிப்பது தவிர வேறு சாய்ஸ் எங்களுக்கில்லை!

  இந்தப் பக்கங்கள், தங்களுடைய வாழ்நாள் முழுவதுமே புத்தகனலை நேசித்து, சேகரித்துப் பராமரித்து வருகிற ஒரு லட்சியத் தம்பதியினரின் முயற்சிக்கு, வெறும் வாய்ச்சொல்லில் மட்டுமல்லாமல், செயலிலும் ஆதரவு தர முன் வருகிறவர்களுக்கானவை. புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறோம்!

  ReplyDelete

புதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தொடர்ந்து புதிய இடுகைகளைப் பெற உங்கள் மெயில் முகவரியை arivedeivam@gmail.com க்கு அனுப்பி வையுங்கள்.