Thursday, July 26, 2012

ஞானாலயா! வாருங்கள் சேர்ந்து செயல்படலாம்!


ந்த வலைப்பக்கங்களை  நண்பர் நிகழ்காலத்தில் சிவா துவங்கி வைத்த நேரம், மிக மிக நல்ல நேரம் என்றே சொல்ல வேண்டும்!
புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் உங்கள் ஆதரவுக் கரங்களை வேண்டி நிற்கிறது என்ற செய்தி, தமிழ் இணையத்தில் நிறைய நண்பர்களை சென்றடைந்திருக்கிறது..

செய்திகள் பரவிய அதே வேகத்தில் உதவிக்கரங்கள் நீளவில்லை என்பது உண்மையே!
னாலும்,இந்த செய்தி நிறையத் தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது. எதிர்பார்க்காத இடங்களில் இருந்தெல்லாம் சிறுகச் சிறுக உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை, நன்றியோடு இந்தத் தருணத்தில் சொல்லியே ஆகவேண்டும்.

ப்படி முந்தைய பதிவொன்றில் சொல்லியிருந்ததில் கொஞ்சம் கூடப்பொய்யே இல்லை! சிவாவைத் தொடர்ந்து கழுகு குழுமத்திலும் தன்னுடைய வலைப்பதிவிலும் நண்பர் தேவா ஞானாலயாவுக்கு உதவிக் கரங்களைத் தேடுவதில் சேர்ந்து கொண்டார். இப்போது திருப்பூரில் இருந்து நண்பர் ஜோதிஜி இந்தக் குழுவில் சேர்ந்து கொண்டிருக்கிறார்
 
http://www.4tamilmedia.com/ தளத்தில் ஒரு பரந்த அளவிலான வாசகர்களிடம் ஞானாலயாவுக்கு உதவிக்கரங்கள் வேண்டும் என்ற செய்தியைக் கொண்டு சென்றதிலும், தன்னுடைய நண்பர்கள் வழியாக முடிந்ததைச் செய்யும் பணியிலும் ஜோதிஜி  சேர்ந்து கொண்டிருக்கிறார். அதே மாதிரி இன்னொரு அமெரிக்க வாழ் நண்பர், தற்சமயம் இந்தியாவுக்கு வந்திருப்பவர், தொடர்பு கொண்டு தான் செய்யக் கூடியதென்ன என்பதைக் கேட்டறிந்தார்.

கூகிள் ப்ளஸ்சில் மட்டும் ரீஷேர் செய்யப்பட்டபகிர்ந்து கொண்ட ப்ளஸ்சர்களைப் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையை அப்படியே எடுத்துக் கொண்டு இந்த செய்தி எத்தனை முறை வலம் வந்ததென்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், ஞானாலயாவுக்கு உதவிக்கரங்கள் வேண்டும் என்ற செய்தி சுமார் மூன்று லட்சம் பேர்களை, அல்லது மூன்று லட்சம் தடவை தமிழ் இணையத்தில், கூகிள் ப்ளஸ்ஸில் புழங்கிக் கொண்டு  இருப்பவர்களிடம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

னால், இந்த செய்தியை எத்தனை பேர் உள் வாங்கிக் கொண்டார்கள், நாமும் இதில் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும் என்று எத்தனை பேர் முன் வந்தார்கள் என்றுபார்த்தால், இருகை விரல் எண்ணிக்கைக்குள் அடங்கி விடும்!

ப்படியானால், இதுவரை செய்ததெல்லாம் வீண் தானா? இல்லவே இல்லை! 


Think differently  என்ற வலைப்பதிவில் சில மாதங்களுக்கு முன்னால், திரு மக்கின்னான், டெரெக் சிவெர்ஸ் என்பவர் யூட்யூபில் தலைமைப் பண்பு  குறித்து வலையேற்றம் செய்திருந்த வீடியோ ஒன்றை மேற்கோள் காட்டி இருந்தார். இந்த மூன்று நிமிட வீடியோவைக் கொஞ்சம் கவனமாகப் பாருங்கள். இதனுடைய டெக்ஸ்ட் வடிவமிங்கே

மேல் சட்டை அணியாத ஒருவர், சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், நடனமாட ஆரம்பிக்கிறார். சிறிது நேரமானதும் இன்னொருவரும் சேர்ந்து கொள்கிறார்.  
ந்த முதல் பின்பற்றும் நபர்  கிடைக்கும் அந்தத் தருணம் தான் மிக முக்கியம்

ரண்டுபேர் சேர்ந்து நடனமாட ஆரம்பித்ததும், மூன்றாவதாக ஒருவர் சேர்ந்து கொள்ள, நடனமாடும் விருப்பம் ஒரு கூட்டத்தின் விருப்பமாக மாற ஆரம்பிக்கிறது. அப்புறம் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்!

மாற்றத்திற்குத் தயாராவதும் இப்படித் தான்! ஒரு முன்னோடி, மாற்றத்திற்கு வித்தாக இருக்கிறான். அவனைப் பின்பற்றும் அந்த முதலாவது, இரண்டாவது ஆர்வலர்கள் தான் முக்கியம். அப்புறம் அது எல்லோருக்கும் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விடுகிறது!

ங்கே இந்த இடத்தில் அந்த முன்னோடியாக ஞானாலயா தம்பதியினரை வைத்துக் கொண்டு, அவர்களுடைய ஆயுட்கால உழைப்பை, சாதனையை உண்மையாக  பின்பற்றுகிற ஆர்வலர்கள் இடத்தில் உங்களை வைத்துப்பாருங்கள்!

ப்படி உண்மையான ஆர்வலர்கள் ஆயிரக்கணக்கில், ஏன் நூற்றுக் கணக்கில் கூட  வேண்டியதே இல்லை, ஒரு நாலைந்து பேர் சேர்ந்தாலே கூடப்போதுமானது! ஆயிரக்கணக்கானவர்களை ஈடு படுத்துகிற மாற்றத்தின் கருவிகளாக, விதை நெல்லாக  அவர்கள் தான் இருப்பார்கள்!

லமரத்தின் விழுதுகளாக, விதைநெல்லாக, மாற்றத்தின் கருவிகளாக இருக்கச் சம்மதமா? வாருங்கள்! சேர்ந்து செயல்படலாம்!

செய்ய வேண்டிய வேலைகள் நிறைய காத்துக் கொண்டிருக்கின்றன!

..

4 comments:

 1. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நன்றி. (த.ம. 1)

  ReplyDelete
 2. மாற்றம் உடனே நிகழ்ந்துவிடுவதில்லை என்றாலும் நிகழ்ந்தே தீரும்,உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. கிருஷ்ணமூர்த்தி சார்.,
  ஓசிஆர் மென்பொருள் குறித்து எனக்கு நீங்கள் அனுப்பிய விளக்கம் எளிதில் புரியும்படியும் தெளிவாகவும் இருந்தது. அதை இந்த வலைதளத்தில் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும். நம் முன் காத்திருக்கும் பணியின் தன்மை இதன் மூலம்வெளிப்படும்.

  அக்கடிதத்தை செம்மைப்படுத்தி வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
 4. @திரு.தனபாலன்!

  தமிழ்மணத்தில் வாக்களிப்பதோடு நின்றுவிடாமல்;உங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடம் ஞானாலயா குறித்த செய்திகளைப் பகிர்ந்து கொள்வதுடன், கொஞ்சம் உதவியையும் வேண்டலாமே!

  @இரவுவானம் திரு சுரேஷ்!

  வெட்டி ப்ளாக்கர்ஸ் என்ற முகநூல் பக்கங்களில் ஞானாலயாவுக்கு உதவி கோரும் செய்தியை நீங்கள் பகிர்ந்து கொண்டிருப்பதையும், பின்னூட்டங்களையும் பார்த்தேன். இந்த மாதிரியான பொது விஷயங்கள், ஒருமுறை பகிர்வது போதாது! அடிக்கடி மக்களுக்கு நினைவு படுத்த வேண்டியிருக்கும்! செய்வீர்களா? :-)

  @நிகழ்காலத்தில் சிவா!

  தமிழில் ஓசிஆர், அதன் உடனடி அவசியம் இருக்கிறதா இல்லையா என்பதை, கொஞ்சம் தகவல்களை சரிபார்த்துவிட்டு, நிச்சயமாக எழுதுகிறேன்.

  ReplyDelete

புதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தொடர்ந்து புதிய இடுகைகளைப் பெற உங்கள் மெயில் முகவரியை arivedeivam@gmail.com க்கு அனுப்பி வையுங்கள்.